Disqus Shortname

4 day instant bank loan 2019 Home buyers | 4 நாட்கள் உடனடி வங்கி கடன் | ...

  1.          

4 day instant bank loan 2019 Home buyers | 4 நாட்கள் உடனடி வங்கி கடன் | நியூடன் online தமிழ்,



இன்று முதல் தொடர்ச்சியாக 4 நாள் உடனடி வங்கி கடன் வழங்கப்படுகிறது வீடு வாங்குவோர் மற்றும் சிறு தொழில் செய்வோர் அனைவரும் பயன்படுத்திக்கொள்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,

நம்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 250 மாவட்டங்களிலும் இன்று முதல் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு வங்கிகளில் உடனடி கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த கடன் மேளாவை, அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மற்றும் தனியார் துறை வங்கிகளும் நடத்துகின்றது

சிறு குறு தொழில் செய்கின்றவர்கள், வீடு கட்டவோ அல்லது வாங்கவோ நினைப்பவர்கள், இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வாங்க விரும்புபவர்கள், நான்கு சக்கர மோட்டார் வாகனம் வாங்க விரும்புவோர், விவசாயிகளும், மற்றும் சில்லரை வர்த்தகர்கள் தொழில் செய்வோர், இந்த முகாமில் பங்கேற்று வங்கி கடனை உடனடியாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்,
மத்திய நிதி அமைச்சர் உயர்திரு நிர்மலா சீதாராமன் அவர்கள் பண்டிகை காலங்களையொட்டி இந்திய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தியநாடு முழுவதும் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள்,
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:-

இந்தியநாடு முழுவதும் 400 மாவட்டங்களிலும் இரண்டு கட்டமாக உடனடி வங்கி கடன் மேளா நடைபெறும் என்றும், மேலும் மாவட்டங்களை அடையாளம் காண்பதற்காக, பொதுத்துறை வங்கிகளின் ஆய்வு கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்து இருந்தார்.

பொதுத்துறை வங்கிகள்:-

இதன் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளின் ஒவ்வொரு ஆண்டு செயல்பாடு பற்றிய ஆய்வு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக 400 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. மேலும் கடன் வழங்குவதில் அரசு குறிப்பிட்ட இலக்கை  தொடடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே இந்த கடன் வழங்கும் முகாமில் தனியார் வங்கிகளும் தாமாகவே முன்வந்து இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்,

எப்படி கடன் வழங்கப்படுகிறது:-

இதன்படி முதல்கட்டமாக இந்தியநாடு முழுவதும் உள்ள "250" மாவட்டங்களில் இன்று 03,04,2019(வியாழக்கிழமை) முதல் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு கடன் வழங்க, பாரத ஸ்டேட் வங்கி, மற்றும்பஞ்சாப் நேஷனல் வங்கி, மற்றும்பேங்க் ஆப் பரோடா, மேலும் கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளும் முடிவு செய்து இருக்கின்றது.

கடன் உடனடியாக பெறலாம்:-

எதிர்வரும் இன்னும் 3 தினங்களில் சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் இந்தியநாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள இந்த நிலையில் இந்த கடன் மேளா நடைபெறுகிறது, இதில் சில்லறை வர்த்தகம் செய்வோர், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள், மேலும் வீடு மற்றும் வாகனங்கள் வாங்க விரும்புவோர், மேலும் கல்வி கடன் வாங்கி விரும்புவோர், மற்றும் தனிநபர் கடன் வாங்க விருப்பம் கொண்ட ஆகியோருக்கு உடனடியாக வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

இதில் விதிமுறைகள் பின்பற்றப்படும்:-

இத்தகைய கடன் வழங்கும் திட்டம், பண்டிகை காலங்களில் தொழில் வர்த்தகர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருப்பதற்காகவும், பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கைகளிலும் பணம் தாளாமாக புழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த வங்கி கடன் வழங்கப்படுகிறது. உடனடி கடன் என்றாலும் அனைத்து நிதிதொடர்பான  விதிகளும் அதுதொடர்பான விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளும் வங்கிகளால் பின்பற்றப்படும் அதனால் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டியது உங்கள் கடமை

கடன் வழங்கும் முகாம்கள்:-

அந்தந்த மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம்கள் எங்கே உள்ளது என்பது பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் உள்ளூர் வர்த்தக சங்கங்கள் மூலமாகவும், வணிக நிறுவனங்கள் மூலமாகவும், வர்த்தகசபைகள் மூலமாகவும் வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் கடன் மேளா குறித்து தகவல் முழுமையாக பரப்பப்பட்டுள்ளது.

தீபாவளி சமயத்தில் கடன்:-

இரண்டாவது கட்டமாக உடனடி கடன் வழங்கும் இந்த திட்டம் தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக மீதமுள்ள 150  மாவட்டங்களுக்கும் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உடனடி கடன் வழங்கும் திட்டம் நடத்தப்பட உள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டும் என்று இந்த தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.






Post a Comment

0 Comments