டாக்டர், ராதாகிருஷ்ணன்IAS பணியிட மாற்றம்
அரசு போக்குவரத்து துறை செயலாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேரிடர் மேலாண்மை செயலாளராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்,
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சுனாமி பாதிப்பின் போது நலப் பணிகள் பல சிறப்பாக மேற்கொண்டதன் அடிப்படையில் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர், தமிழ்நாட்டில் சிறந்த நேர்மையான அதிகாரி என்ற பாராட்டையும் பெற்றவர்,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார், பணிக்கு வராமல் சொந்த வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அவர் கூறிய தகவல் பத்திரிகை செய்தியாகவும் தினமலர் வலைதளப் பக்கத்தில் வெளியானது,
சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த
அதிகாரி தற்சமயம் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,
இருந்தபோதும் பேரிடர்மேலாண்மை செயலாளராக மாற்றப்பட்டது சுனாமி பாதிப்பின் போது இவரது சிறப்பான செயல்பாடுகளே காரண மாக காட்டப்படுகிறது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பதிலாக புதிதாக, ஆற்றல் துறை செயலாளராக இருந்த பி,சந்திரமோகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்,
ராதாகிருஷ்ணன் அவர்களைப்போலவே சந்திரமோகன் அவர்களும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் சிறப்பாக செயல்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது,
மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவித்த 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு ஏற்பாடுகளில் முதல் கட்டமாகவும் இருக்கலாம் இந்த பணியிடமாற்றம் என்று எதிர்பார்க்கலாம்
இதைப்பற்றி உங்களது கருத்துக்களை கீழே பதிவிடலாம்
1 Comments
What about free gas. Cylinder supply.you be said first gas will be issued free of cost and the distributor is asking because for rs.600/- money. Is it fake news.
ReplyDelete