Disqus Shortname

பிறப்பு சான்றிதழ் | How to download Birth Certificate online | நியூடன் O...




பிறப்பு சான்றிதழ் ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்தப்பதிவில் உங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக பிறப்புச் சான்றிதழ்  எப்படி பதிவிறக்கம் செய்து கொள்வது என்ற முழுமையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது,



கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொட்டவுடன் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்படும் வலைதளத்திற்கு செல்வீர்கள்,

அங்கே முதல் காலத்தில் உங்கள் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தேர்வு செய்யச் சொல்லும், அதை தேர்வு செய்தபின் உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்த பின் அதற்கு கீழே உங்கள் குழந்தை பிறந்தது அரசு மருத்துவமனையில் அல்லது தனியார் மருத்துவமனைகளிலும் பிறந்திருந்தால் அதை தேர்வு செய்யுங்கள்,

பின்பு உங்கள் குழந்தை பிறந்த தேதி  மற்றும் பிறந்த மாதம்  மற்றும் பிறந்த வருடம்  ஆகியவற்றை உள்ளிட வேண்டும்,  பின்பு உங்களது மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும் உங்களுக்கு வரும் ஓ டி பி பூர்த்தி செய்ய வேண்டும், அருகிலுள்ள கேப்ட்ச வை இடுகையில் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும், அதன்பின் வெரிஃபிகேஷன் கொடுத்தாள் நீங்கள் குறிப்பிட்ட தேதியில் பிறந்த குழந்தைகளின் பட்டியல் உங்களுக்கு காண்பிக்கப்படும் அந்தப் பட்டியலில் உங்கள் குழந்தை பெயர் உங்கள் பெயர் உங்கள் மனைவியின் பெயர் முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அதில் உங்கள் குழந்தை பெயரின் அருகில் ஒரு எண் நீலநிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்

அதை தொட்டவுடன் உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் காட்டப்படும் அதனை நீங்கள் டவுன்லோட் செய்து அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்





 website link

   http://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp                             

Post a Comment

0 Comments