(முக்கிய குறிப்பு)
நண்பர்களே தற்சமயம் நீங்கள் ஜியோ ரீசார்ஜ் செய்து இருந்தாள் அந்த பிளான் முடியும் வரை நீங்கள் மற்ற நெட்வொர்க் இற்கு இலவசமாக பேசிக் கொள்ளலாம், இன்று முதல் நீங்கள் புதிதாக ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அதற்கு நீங்கள் பேச வேண்டுமானால் நிச்சயமாக குறைந்தது பத்து ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும்
ஜியோ தற்போது அறிவித்திருக்கும் இந்த பலன்கள் அனைத்தும் மாதாந்திர ரீசார்ஜ் இனி செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும், தற்சமயம் நீங்கள் நீண்டகால ரீசார்ஜ் செய்திருந்தால்இப்போது நீங்கள் இந்த 10 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும்
மக்களுக்கு ஜியோ வைத்த ஆப்பு
இந்த கட்டண உயர்வுக்காக ஜியோ தரப்பிலிருந்து கூறப்படும் பத்து விதமான கருத்துக்கள் கீழே படுத்தப்பட்டுள்ளது......
* Jio முக்கிய அறிவிப்பு*
1. *ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசமே*, மற்ற ஏர்டெல் வோடபோன் ஐடியா பிஎஸ்என்எல், போன்ற மற்ற அழைப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா மட்டுமே சார்ஜ் செய்யப்படும்,
2. ஜியோ இதுவரை மற்ற நெட்வொர்க் களுடன் இணைக்கப்படும் அவுட்கோயிங் கட்டணத்தை தானே ஏற்றுக்கொண்டு செலுத்தி வருகிறது
3. அரசாங்க விதிமுறைகளால் ஜியோ நிறுவனம் இந்த கட்டணத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் கட்டாயத்தில் உள்ளது
4. இந்த கட்டணத்தை டிசம்பர் 2019 முதல் இந்திய அரசாங்கம் தள்ளுபடி செய்வதாக இருந்தது, தற்போதைய சூழ்நிலையில் இதை அமுல் செய்யாத காரணத்தால் ஜியோ நிறுவனத்திற்கு மாதம் ரூபாய் 200 கோடி செலவு ஆகிறது
5. இந்த கட்டணம் தற்காலிகமானதே, இந்திய அரசாங்கம் இந்த கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை இந்தக் கட்டண முறை தொடரும்,
6. சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும், உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்,
7. *இந்த கட்டணத்தை ஈடு செய்வதற்காக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதற்கு இணையான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ஒவ்வொரு 10 ரூபாய் ரீச்சார்ஜிற்கும் 1 GB டேட்டா கிடைக்கும்* (மற்ற ஆப்பரேட்டர்களை ஒப்பிடும் பொழுது குறைவான கட்டணமே)
8. மற்ற ஆப்பரேட்டர்களும் இன்னும் சில நாட்களில் இதே முறையை கடைபிடிக்க கூடும்
9. *ஜியோவில் இருந்து ஜியோவிற்கு அழைப்பது எப்போதும் இலவசமே* மற்ற அழைப்புகளுக்கு மட்டுமே கட்டணம்
10. ஜியோ உங்களின் அபிமான ஆப்பரேட்டராக என்றும் தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளிக்கிறது,
மக்களே! மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஜியோ தரப்பிலிருந்து சொல்லப்பட்ட காரணங்களாகும், இதுவரை இலவசமாக வழங்கி வந்த ஜியோ நிறுவனம், தற்போது வெளிப்புற அழைப்பிற்கு கட்டணம் வசூலிக்கத் துவங்குகிறது, 10,10 2019 இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது, இது வரை இலவசமாக பயன்படுத்தி வந்த அனைவரும் மாதம் எதற்காகவும் தனியாக ரீசார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது, பொதுவாக இதனை மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே!, இந்த புதிய அறிவிப்பு பற்றிய உங்களது கருத்துக்களை இந்த பக்கத்திற்கு கீழே தெரிவியுங்கள்,
0 Comments