Disqus Shortname

கலப்புத் திருமணம்:-


இந்திய அரசாணை எண்.477 சமூக நலத்துறை  மற்றும், அரசாணை எண்.1907 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை


 ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி இங்கு கீழ்க்காணும் வகுப்பினர் இடையே நடைபெறும் திருமணங்கள் மட்டுமே கலப்பு திருமணங்கள் என்று அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


1. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும், அல்லது மேலே குறிப்பிட்ட இனத்தவர்கள் உடன் முன்னேறிய வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறுகின்ற திருமணம்.


2. தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்த ஒருவருக்கு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும், அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறுகின்ற திருமணம்.


3.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும், அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும இடையே நடைபெறுகின்ற திருமணம்.


4. முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும், அல்லது பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த ஒருவரும் அல்லது மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் களிடையே நடைபெறும் திருமணம்.


மேற்குறிப்பிடப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரின் சாதிகளில் ஏதாவது ஒன்றை தனது ஜாதியாக குறிப்பிட்டு சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ஒரு குழந்தைக்கு நிர்ணயிக்கும் சாதி தான் மற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும்.


(அரசாணை எண் 477 சமூக நலத்துறை  அரசாணை எண் 2டி எண்.17 ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம் கலப்பு திருமணமாகக் கொள்ள கூடாது. மேற்படி சலுகை இவ்வினத்திற்கு பொருந்தாது.


மேலும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற சாதி அடிப்படையில் வருவதாலும் மேற்கண்ட நான்கு இனத்தின் கீழ் செய்யப்படும் திருமணங்கள் மட்டுமே கலப்பு திருமணங்கள் என்பதனாலும் மதங்களின் அடிப்படையில் செய்யப்படும் திருமணங்கள் கலப்பு திருமணங்கள் என்று ஏற்றுக் கொள்ள இயலாது.


திருமணம் செய்து கொள்ளும் ஆண் அல்லது பெண் இருவரில் ஒருவர் பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினர்  வகுப்பைச் சார்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல் பொருட்டு இத்திருமணம் கலப்பு திருமணமாக கருதப்படும்.(அரசாணை எண்.939 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறைநாள்:24.9.86)

Post a Comment

2 Comments

  1. சார் கலப்புத்திருமணம் செய்தவர்கள் கிறுஸ்துவ மதத்திற்கு மாறினால் எந்த ஜாதி சான்றிதழ் வாங்க முடியும்.

    ReplyDelete
  2. Naan sc my husband bc muslim..

    ReplyDelete