👇Website Link👇
ஆதார் பற்றிய சில தகவல்கள்:-
வலை தளத்தின் மூலமாக நாம் பதிவிறக்கம் செய்யும் ஆதார் முழுமை பெற்றதாக இருப்பதில்லை, இதில் சிக்னேச்சர் வெரிஃபிகேஷன் செய்யச் சொல்லும், மேலும் இதற்கு முன் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் கள் பிடிஎப் ரீடரில் பார்க்கும்போது ரைட் கிளிக் செய்து சில தகவல்களை தந்து வெரிஃபை செய்வது போன்று தற்போதைய சூழ்நிலையில் செய்யமுடியாது,
மேலும் இதற்கான ஒரே வழி அரசிடம் அச்சிடப்பட்ட ஆதார் அட்டை கூறுவதுதான், நம்மில் பல பேருக்கு மீண்டும் அச்சிடப்பட்ட ஆதார் அரசு இடம் பெறலாம் என்பது தெரிவதில்லை, அரசு ஒருமுறை மட்டுமே நமக்கு ஆதார் அட்டையை வழங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், உதை ஆதார் வலைதளத்தின் மூலமாக நாம் 50 ரூபாய் செலுத்தி நம் ஆதார் பற்றிய தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் குறைந்தது 15 நாட்களில் நமது வீட்டிற்கே பதிவு தபால் மூலமாக புதிதாக அச்சிடப்பட்ட ஆதார் அட்டை உங்கள் பெயரில் பதிவுத் தபால் அனுப்பிவிடுவார்கள்,
மேலும் உதை ஆதார் வலைதளத்தின் மூலமாக நமது ஆதார் எண்ணை உறுதித்தன்மை செய்யலாம், நமது ஆதாரில் நாம் கொடுத்த மொபைல் எண் என்னவென்று அறிந்து கொள்ளலாம், நமது முகவரியை திருத்தம் செய்யலாம், மேலும் இது போன்ற பல திருத்தங்களை இந்த வலைதளத்தின் மூலமாக செய்துகொள்ளலாம், புகைப்பட மாற்றம் மற்றும் மொபைல் எண் சேர்த்தல் மாற்றுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆதார் ஈ-சேவை மையங்களிலும் ஒருசில வங்கிகளிலும் இந்த திருத்தங்களை நாம் மேற்கொள்ளலாம்,
0 Comments