==========================
முக்கிய குறிப்பு
------------------------------------
அனைவருக்கும் வீடு திட்டம் பற்றிய முழு தகவல்களும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, 2015 ஆண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை துவங்கி வைத்தது அப்போதைய நிலையில் எழுத்துபூர்வமாக எழுதப்பட்ட விண்ணப்பங்கள் மூலமாகவே இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது பின்பு மத்திய அரசு இதற்காக புதிதாக ஒரு வலைதளத்தை உருவாக்கி அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் வீடு திட்டத்தை விரிவாக்கம் செய்தது அதனடிப்படையில் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் சொந்தவீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் நோக்கில் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது இதன் மூலம் பல மாநிலங்களில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன்பெற ஏதுவாக அமைந்தது, மேலும் இந்த வலைத்தள பக்கத்தை நீங்கள் பார்வையிடுவது மூலம் அனைவருக்கும் வீடு திட்டம் பற்றிய முழு தகவல்களையும் எளிமையாக தெரிந்து கொள்ளலாம், இந்தத் திட்டம் பற்றிய தகவல்களும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவல்களும், அவ்வாறு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சிறு சிறு தவறுகளை எவ்வாறு சரி செய்வது என்ற தகவல்களையும் முழுமையாக வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த வீடியோக்களில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சில தவறுகளையும் விண்ணப்பிக்கும் வீடியோவில் செய்து காண்பித்திருக்கிறேன் ஏனென்றால் நாம் தவறாக கொடுக்கும் சிலதகவல்கள் அந்த வலைதள பக்கத்தில் தாமாகவே சரிசெய்து கொள்கிறது என்பதை உங்களுக்கு விளக்குவதற்காக செய்துள்ளேன், மேலும் அடுத்தடுத்து பதிவேற்றம் செய்த வீடியோக்களில் அந்தத் தவறுகள் எவ்வாறு சரி செய்யப்பட்டது என்பதையும் விளக்கிச் சொல்லி இருக்கிறேன், சிலருக்கு விண்ணப்பித்து முடிக்கும்போது விண்ணப்ப பதிவு எண் காண்பிக்கப்படும் ஒருசிலருக்கு விண்ணப்ப பதிவு எண் காட்டாது அதற்கான காரணத்தையும் அடுத்தடுத்து பதிவேற்றம் செய்த வீடியோக்களில் தெளிவாக விளக்கிச் சொல்லி இருக்கிறேன், இந்தப் பக்கத்தை பார்வையிடும் நீங்கள் அனைத்து வீடியோக்களையும் முழுமையாக பார்த்துவிட்டு விண்ணப்பிக்க துவங்கினாள் எந்தப் பிழையும் இன்றி வெற்றிகரமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம், இந்த பக்கத்தை முழுமையாக பார்வையிட உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்த வலைதள பக்கத்தின் கீழே கருத்து பதிவில் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்,அதற்கு இந்தப் பக்கத்திலேயே நான் உங்களுக்கு பதில் கூறுகிறேன்,உங்களுக்கு அதிகமான சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த வலைதள பக்கத்தின் இறுதியில் டெலகிராம் லிங்க் கொடுத்துள்ளேன் அதன்மூலம் என்னை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம், இதனோடு பேஸ்புக் லிங்க் கொடுத்துள்ளேன் அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,
இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வலைதளத்தை பற்றிய உங்களது கருத்துக்களை இறுதியில் பதிவு செய்யுங்கள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் அனைத்து ஏழை எளிய மக்களும் பயன் பெறுங்கள், உங்கள் நண்பர்களும் உறவினர்களும் பயன்பெற இந்த பக்கத்தை அவர்களுக்கு பகிருங்கள்
Watsapp -https://chat.whatsapp.com/DQwLJJdR81Y8qFjeknNIY6
Facebook - https://www.facebook.com/profile.php?id=100030164169908
Teligram - https://t.me/joinchat/AAAAAEzgTbbp62hA2L7ofA
Instagram - https://www.instagram.com/newtononlinetmil/
Hello - http://m.helo-app.com/al/ZMkSfSMUN
YouTube - https://www.youtube.com/channel/UCG3KOa8hcPxAT-u9W32f5oQ?view_as=subscriber
அனைவருக்கும் வீடு திட்டம் 2019-2020 | Pradhan mantri aawas yojna 2019-2020 | நியூடன்_ONLINE_தமிழ்,
அனைவருக்கும் வீடு திட்டம் 2019to2020, Pradhan mantri aawas yojna 2019to2020, நியூடன் ONLINE தமிழ்
அனைவருக்கும் வீடு திட்டம் 2019-2020 | Pradhan mantri aawas yojna 2019-2020 | நியூடன் ONLINE தமிழ்
அனைவருக்கும் வீடு திட்டம் 2019-2020 | online apply | நியூடன் ONLINE தமிழ்
]
அனைவருக்கும் வீடு திட்டம் 2019-2020 | online application problems | நியூடன் ONLINE தமிழ்
அனைவருக்கும் வீடு திட்டம் 2019-2020 | online Edit and Track | நியூடன் ONLINE தமிழ்
PMAY NO RECORDS FOUND, என்று வருகிறதா? | நியூடன் online தமிழ்
அனைவருக்கும் வீடு திட்டம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 பேரூராட்சி பகுதிகளில் சொந்த இடத்தில் குடிசை மற்றும் ஓடு போட்ட வீடுகளில் வசிப்பவர்கள் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
இந்த முகாமில் பயனாளர்கள் வங்கி கணக்கில் நேரடியாக இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் ஊர்களில் முழு விவரமும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது
1. கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம்
இத்திட்டத்தில் வங்கிகளின் மூலம் ரூ.6,00,000/- அல்லது ரூ.9,00,000/- அல்லது ரூ.12,00,000/- வழங்கப்படும். ரூ.6,00,000 த்திற்கு 6.5% வட்டியும், ரூ.9,00,000 த்திற்கு 4% வட்டியும், ரூ.12,00,000 த்திற்கு 3% வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.
2. மலிவு விலை வீட்டுவசதி திட்டம்
இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ஒரு குடியிருப்பு வழங்கப்படும். ஒரு குடியிருப்பின் கட்டுமான மதிப்பில் 10 சதவிகித தொகையை பயனாளி முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.
3. பயனாளி தானே வீடு கட்டிக்கொள்ளும் திட்டம்
இத்திட்டத்தில் பயனாளிக்கு ரூ.2,10,000/- நான்கு தவணைகளாக வழங்கப்படும். பயனாளிகளின் மூலம் கட்டப்படும் வீடானது 300 சதுர அடிக்கு அதிகமாகவும் 600 சதுர அடிக்கு மிகாகலும் இருத்தல் வேண்டும்.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
- வருட வருமானம் மூன்று லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
- பயனாளி திருமணமானவராக இருத்தல் வேண்டும்.
- பயனாளிகளுக்கு கான்கிரிட் வீடு இருத்தல் கூடாது.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்
பயனாளிகள் நில உரிமை பத்திரம் அல்லது பட்டா, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை சமர்ப்பித்தல் வேண்டும்.
பயனாளி:
வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள இந்திய குடிமக்கள்
பயன்கள்:
சொந்த வீடு கட்ட நிதி உதவி
தற்போது பன்வாரிலால் புரோகித் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள தமிழ்நாட்டில், எடப்பாடி க. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலமைச்சராகவும், அமைச்சர்களின் தலைவராகவும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் என்பவரும் இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,21,47,030 ஆக உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் பரப்பளவு 1,30,058 கிலோமீட்டர்கள் உள்ளடக்கியதாகும்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆரம்பத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் வழங்கியது, பின்னர் குடிசைவாசிகள் வாழ்வாதாரத்தை மாற்றம் கொண்டுவரும் நோக்கத்துடன் நகர்த்தப்பட்டது. அபிவிருத்திக்கு சமூக அடிப்படையான மனிதாபிமான அணுகுமுறையில் கட்டப்படும் வீடுகள், திட்டங்கள் வாயிலாக, வீடுகள் மற்றும் புனர்வாழ்வு மரபுவழி அணுகுமுறையை நோக்கமுள்ளவையாக கருதப்படுகிறது. மேலும் சமூகத் தொழிலாளர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் உள்ளடக்கிய சமூக அபிவிருத்தி, விழிப்புணர்வு பொறியியல், போன்ற திட்டமிடல் மற்றும் வருவாய் அம்சங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, ஆகவே இந்த வாரியம் பயனாளிகள் தொடர்பாக இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. வாரியத்தால் முறைப்படுத்தப்படும் கொள்கைகள், மற்றும் திட்டங்கள் சேரி வாசிகள் உண்மையில் கொண்டுசேர்க்கிறது. இது உலக வங்கியால் நிதியளிக்கப்பட்ட குடிசை மேம்பாட்டு திட்டத்தில் சமூக பங்கேற்பை உறுதிப்படுத்திய பிறகு, 1978 ஆம் ஆண்டு அது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும ஆணையத்தின் முன்முயற்சியில் செயல்படுகிறது
சேரி குடும்பங்கள் தீ, வெள்ளம், போன்ற பேரிடர் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு பல்நோக்கு அறைகளாக, படுக்கையறை, சமையலறை, சுதந்திரமான கழிப்பறை, நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வெளியேற ஏற்பாடுகள் ஆகியவற்றையும், மேலும் நடைபாதை அணுக்கம், தெரு விளக்கு, மேற்பரப்பு வடிகால் வழங்கப்படுகின்றன.
20 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு மாதத்திற்கு ரூபாய் 250 / - என்ற விகிதத்தில் அதிகமான நல்கைத் தொகை வாடகைக் கொள்முதல் முறைமையில் குடிசைக் குடும்பங்களுக்கு இந்த குடியிருப்புக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குடிசைகளில், அனைத்திற்கும் சமமான இட ஒதுக்கீடு சாத்தியமற்றதல்ல, எனவே அவைகள் நீக்கப்படுகின்றன
"தொலைநோக்குத் திட்டம் 2023" இது, விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் முதல் முறையாக உயர் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஒரு மூலோபாய நீண்ட கால திட்டமாகும். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற குடிமக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கும், 2023 க்கு முன்னர் மாநகரங்கள் மற்றும் நகரங்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற மக்களுக்கும் அடிபடைவசதியுடன் கூடிய வீடு வழங்கப்படும் இந்த வீட்டுவசதிகள் “அனைவக்கும் வீடு” திட்டத்தின் கீழ் நிதியுதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கு முன்னர் அனைத்து தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள் மூலம் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு உதவி வழங்கும் வகையில் நகர்ப்புற பகுதிகளில் "அனைத்து மக்களுக்கான வீட்டுவசதி" திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் இந்திய பிரதம மந்திரியால் துவக்கப்படும் இந்த குறிப்பணிகள், 30 சதுர மீட்டர் வரை வீடுகளின் கட்டுமானத்தை ஆதரிக்கிறது. மத்திய அரசின் மானியம் பெறும் மற்றும் மத்திய துறை திட்டங்கள் உதவியுடன் அடிப்படை குடிமை உள்கட்டமைப்புடன் இத்திட்டம் உருவாக்கபட்டது
1 Comments
Soniya gandhi
ReplyDelete