தமிழக அரசு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிடும் விதமாக படித்துவிட்டு ஏழ்மையில் வாடும் இளைஞர்களுக்கு உதவித்தொகையாக ₹200 முதல் ₹1000 ரூபாய் வரை மாதாந்திர உதவித் தொகையாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தற்சமயம் தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கான அறிவிப்பு நீலகிரி மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம் இந்த இரண்டு மாவட்டங்களிலும் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது,
1, இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதை புதுப்பித்தவர் ஆக இருத்தல் வேண்டும்,
2, விண்ணப்பதாரர் வேற எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிபவர்ஆக இருக்கக் கூடாது,
3, மேலும் கல்வி பயிலும் மாணவர் ஆக இருத்தல் கூடாது, அஞ்சல் வழியிலும் கல்வி பயில்பவர் ஆக இருக்கக் கூடாது,
4,விண்ணப்பதாரர் தமிழகத்திலேயே குறைந்தது 15 ஆண்டுகள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்,
5, விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
கல்வித் தகுதிக்கு ஏற்றார்போல் வழங்கப்படும் உதவித் தொகை விவரங்கள்
1, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பொதுப்பிரிவினர் -₹200, மாற்றுத்திறனாளிகளுக்கு -₹600,
2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொதுப்பிரிவினர் - ₹300, மாற்றுத்திறனாளிகளுக்கு - ₹600,
3, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொதுப்பிரிவினர் - ₹400, மாற்றுத்திறனாளிகளுக்கு - ₹750
4, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ,- ₹600, மாற்றுத்திறனாளிகளுக்கு - ₹1000,
மேலும் அரசு வெளியிட்டுள்ள பல தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள download link ஐ கிளிக் செய்யவும்
திருப்பூர் மாவட்டம்
நீலகிரி மாவட்டம்
0 Comments