Disqus Shortname

பெண்களுக்கு அரசு வழங்கும் இலவச திட்டங்கள் - 2020

தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் இலவசத் திட்டங்கள் 2020


1. மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்:

2. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்

3. அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்

4. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

5. டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம் 

6. முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்

7. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம்

8, மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி வழங்குதல்

9, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2017

10, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் – 2006

11, அரசு சேவை இல்லம் மேல்நிலைப் பள்ளி

12, பணிபுரியும் மகளிர் விடுதி

13, வரதட்சனைத் தடுப்புச் சட்டம் 1961




1. மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்: :
பயன் மதிப்பு :
  • ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பு இறுதி தோ்வு எழுதியிருக்க வேண்டும்.
  • ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப் படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பயனாளி : மணமகளின் பெற்றோர்
தகுதிகள் :
  •  18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  •  குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
  •  திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
  • திட்டத்தின் நோக்கம் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல்.
    திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1989
    17.05.2011 க்கு முன்பாகரூ25000/-மற்றும்ரூ50000/-காசோலை மட்டும் வழங்கப்பட்டது. (17.05.2011 முதல் ரூ25,000/ ரூ50,000 நிதியுதவியுடன் 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படுகிறது)
    திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்
    ஏழைக்குடும்பமாக இருத்தல்வேண்டும்.
    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே பயன்பெற இயலும்.
    திருமணத்தின் போது மணப்பெண் 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தி அடைத்திருந்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.
    மணப்பெண்ணின் கல்வித்தகுதி
    திட்டம்-1
    மணப்பெண் 10-ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்து (தேர்ச்சி அல்லது தோல்வி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக்கல்வி மூலம் படித்திருந்தால்10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இருத்தல் வேண்டும்.
    பழங்குடியினராக இருந்தால் 5ம் வகுப்பு வரை படித்திருத்தல் வேண்டும்.
    திட்டம்-2
    பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்
    பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
    இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்
    வருமான சான்றிதழ் (ரூ72,000/-க்குள்)
    சாதிச்சான்று
    திருமண அழைப்பிதழ்
    மணமகள் கல்வி மாற்றுசான்றிதழ்
    மணமகள் மதிப்பெண்பட்டியல்–பட்டய சான்றிதழ் (Provisional or convocation)
    குடும்பஅட்டை
    மணமகன் மாற்று சான்றிதழ்
    மணமகள்,மணமகன் மற்றும் தாய்(அ)தந்தை புகைப்படம்
    வங்கி கணக்கு புத்தகம்
    தாய் தந்தை ஆதார் கார்டு
    நிதி உதவியின் அளவு(17.05.2011முதல்)
    திட்டம்-1
    ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம், 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்
    திட்டம்-2
    ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்
    விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில், தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
    குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

All pdf


2. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்:
 திட்டத்தின் நோக்கம் : ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்த உதவுதல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1981
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மணப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
வருமான சான்றிதழ் (72000/-க்குள்)
சாதிசான்று
திருமண அழைப்பிதழ்
மணமகள் கல்விமாற்று சான்றிதழ்
மணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ் (Provisional or convocation)
குடும்ப அட்டை
மணமகன் மாற்றுசான்றிதழ்
மணமகள்,மணமகன் மற்றும் தாய் புகைப்படம்
வங்கிகணக்கு புத்தகம்
தாய் ஆதார்கார்டூ
தாய் விதவைசான்று
திருமணம் நடைபெறவிருக்கும் இடத்திற்கான சான்று
நிதி உதவியின் அளவு :
திட்டம்-1
ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும். கல்வித்தகுதி நிபந்தனையில்லை.
திட்டம்-2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர் எனில் தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில் தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
  • ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பழத்திருந்தால் போதுமானது.
  • ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளி: விதவை தாயார்
தகுதிகள் :
  •  18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்
  •  குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
  •  திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.

All pdf


3. அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம் :
திட்டத்தின் நோக்கம் : ஆதரவற்ற பெண்கள் திருமணத்திற்கு நிதி உதவி அளித்தல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1985-1986
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் : 1. ஆதரவற்ற பெண்ணாக இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை
திருமண தேதியன்று மணப்பெண் 18வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை.
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
தாய் தந்தை இறப்புசான்றிதழ்
சாதிசான்று
திருமண அழைப்பிதழ்
மணமகள் கல்வி மாற்று சான்றிதழ்
மணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ் (Provisional or convocation)
குடும்பஅட்டை
மணமகன் மாற்றுசான்றிதழ்
மணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்
வங்கி கணக்கு புத்தகம்
மணமகன் மற்றும் மணமகள் ஆதார்கார்டூ
திருமணம் நடைபெறவிருக்கும் இடத்திற்கான சான்று
நிதியுதவியின் அளவு :
திட்டம்-1
குறைந்தபட்ச கல்வித்தகுதி நிபந்தனையின்றி ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்
திட்டம்-2
பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டயப்படிப்பு(DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.சிறப்பு நேர்வுகளில்,தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
  • ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது.
  • ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளி : தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்.
தகுதிகள் :
  •  18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  •  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருத்தல் வேண்டும்
  •  திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
  •  தாய், தந்தை இறப்பு சான்று சமா்பிக்க வேண்டும்.

All pdf


4. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் :
பயன் மதிப்பு :
  •  ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் (ரூ. 15,000/- காசோலை போதுமானது ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
  •  ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் -மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு தோ்ச்சி (ரூ. 20,000/- காசோலை பெற்றிருக்க வேண்டும் ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
பயனாளி : கலப்புத் திருமண தம்பதியா்.
தகுதிகள் :
  •  18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  •  திருமண வகை கீழ்கண்டவாறு இருத்தல் வேண்டும் FC- BC,SC/ST- BC, SC/ST-FC
  •  குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.
  •  திருமண நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மனு செய்ய வேண்டும்.
  •  வயது வரம்பு இல்லை.

All pdf


5. டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம் :
பயன் மதிப்பு :
திட்டத்தின் நோக்கம் விதவைகளுக்கு மறுமணத்திற்கு நிதியுதவி அளித்தல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1975
திட்டத்தில் பயன் பெறுவதற்கானதகுதிகள்
மறுமணத்தின் போது குறைந்த பட்சவயது 20ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வருமான உச்சவரம்பு இல்லை
விதவைச்சான்று மற்றும் மறுமண பத்திரிகை மற்றும் வயதுச்சான்று இருக்க வேண்டும்.
இணைய தளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்
விதவைசான்று
சாதிசான்று
திருமண அழைப்பிதழ்
மணமகள் கல்வி மாற்று சான்றிதழ்
மணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ்
(Provisional or convocation)
குடும்பஅட்டை
மணமகன் மாற்று சான்றிதழ்
மணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்
வங்கி கணக்கு புத்தகம்
மணமகள் மற்றும் மணமகன் ஆதார்கார்டு
திருமண பதிவுசான்று
நிதியுதவியின் அளவு
திட்டம் 1
ரூ.25,000 வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000 காசோலையாகவும், ரூ.10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம்) 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்
இதற்கு கல்வித்தகுதி நிபந்தனையில்லை.
திட்டம்-2
பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்ற பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும் வழங்கப்படும்) இதனுடன் சேர்த்து திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு மறுமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
  •  ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. (ரூ. 15,000/- காசோலை, ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
  •  ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ரூ. 20,000/- காசோலை வேண்டும். ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
பயனாளி : விதவை மறுமண தம்பதியா்
தகுதிகள் :
  •  குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.
  •  குடும்ப ஆண்டு வருமானம் வரம்பு இல்லை.
  •  திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  •  விதவைச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

All pdf


6. முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் :
பெண் குழந்தைகள் கல்வியில் மேம்படவும், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் அதிகரிக்கவும், பெண் சிசு கொலை தடுக்கும் பொருட்டு, ஆண் குழந்தைகளை விரும்பும் மனப்போக்கை மாற்றிடவும் தமிழ்நாடு அரசு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 1992-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2001 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என பெயா் மாற்றம் செய்து நடைமுறையில் இருந்து வருகிறது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் திட்டம்-1 மற்றம் திட்டம்-2 என்ற தலைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திட்டம்-1

ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.50000/- வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.

திட்டம்-2

ஒரு பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை அல்லது இரண்டு பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.25000/- வீதம் தலா இரண்டு குழந்தைகளுக்கும் வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.
இந்நோ்வில் முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தையும் பிறந்து குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.25000/- வீதம் தலா மூன்று குழந்தைகளுக்கும் வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.
முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தின்கீழ் பயன்பெற்ற குடும்பங்களின் பெண் குழந்தைகளில் எதிர்பாராத விதமாக பயனாளி இறந்துவிட்டால் அந்த பயனாளிக்கு உரிய வைப்புத் தொகையினை அக்குடும்பத்திலுள்ள மற்றொரு பயனாளிக்கு அளிக்கப்படும். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கலந்திருக்க வேண்டும். அவ்வாறு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுதிய மதிப்பெண் பட்டியலுடன் 18 வயது பூர்த்தியடைந்தவுடன் பயனாளிக்குரிய வைப்புத் தொகைக்கான முதிர்வுத் தொகை வழங்கப்படும்
  • திட்டம் I : ரூ. 50,000/-
  • திட்டம் II : ரூ. 25,000/- (01.08.2011 அன்றோ அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு)
தகுதிகள் :
திட்டம் I :
  • குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
திட்டம் II :
  • குடும்பத்தில் இரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
பொது :
  •  ஆண்/பெண் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  •  ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
  •  2வது குழந்தை பிறந்த 3 வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

All pdf


7. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் :
பயன் மதிப்பு : தையல் இயந்திரம்.
பயனாளி : விதவை/கணவரால் கைவிடப்பட்டோர் நலிவுற்ற ஏழைப்பெண்/மாற்றுதிறனாளி ஆண்/பெண்
தகுதிகள் :
  •  20 வயதிலிருந்து 40க்குள் இருக்க வேண்டும்.
  •  குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 24,000/-க்குள் இருக்க வேண்டும்.
  •  தையல் தொிந்திருக்க வேண்டும்.

All pdf


8, மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி வழங்குதல்
  •  அடையாள அட்டை
  •  சுய தொழில் செய்ய பயிற்சி
  •  40 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு ஓய்வூதியம்

9, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2017
  •  நேரடியாகவோ, தீா்ப்பாயத்தின் மூலமாகவோ பெறப்படும் பாதிக்கப்பட்டோாின் மனுக்கள் சமரச அலுவலா் (மாவட்ட சமூகநல அலுவலா்) விசாரணை செய்து தீா்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பார்
  •  தன்னை பராமரித்துக் கொள்ள வாய்ப்பு இல்லதா பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் நிதி மன்றத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு கோட்டாட்சியா் தலைமையிலும் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
  •  ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையிலும் மேல்முறையீட்டு தீா்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
10, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் – 2006
18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிரைவடையாத ஆணும் செய்யும் திருமணமே குழந்தை திருமணம் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய திருமணம் செய்யும் பெற்றோர்களும், உறவினா்களும், உடந்தையாக இருப்பவா்களும் தண்டனைக்கு உரியவா்கள்.
  • காவல் துறை
  •  மாவட்ட சமூகநல அலுவலா்
  •  நீதித் துறை
  •  வட்டாட்சியா்
  •  குழந்தைகள் நலம் குழுமம்
  •  பஞ்சாயத்து கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் (ஊராட்சி தலைவா், சமூக நல விரிவாக்க அலுவலா், கிராம உதவிக் குழு செயலா், பள்ளித் தலைமையாசிாியா், பெண் வாா்டு உறுப்பினா், கிராம நிர்வாக அலுவலா்)
குழந்தைகளுக்காக 24×7 செயல்படும் அவசர உதவி எண் – 1098
11, அரசு சேவை இல்லம் மேல்நிலைப் பள்ளி
சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளியில் மாணவிகள் சோ்த்து கொள்வதற்க்கு
தகுதிகள் :
  •  14 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்
  •  விதவை மகள்
  •  ஆதரவற்ற பெண்கள்
  •  இல்லத்திலேயே தங்கி கல்வி பயில வேண்டும்.
    a) மேல் நிலை படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் தொடா்ந்து பயில ஆண்டிற்கு ரூ. 33,000/- வழங்கப்படுகிறது.
    b) தொடா்ந்து சேவை இல்லத்திலேயே தங்கி ஆசிரியா் பயிற்சி, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் வசதி.
12, பணிபுரியும் மகளிர் விடுதி
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து மாத வருமானம் ரூ. 15,000/-க்குள் ஊதியம் பெறும் பெண்களுக்காக அரசு பணிபுாியும் மகளிர் விடுதி செயல்படுகிறது. ஒரு நபா்க்கு மாத வாடகை ரூ. 200/-
சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள் :
பணிபுரியும் நிறுவனத்தினாிடமிருந்து சான்று
  • a) ஊதிய சான்று
  • b) ஆதாா் காா்டு
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005.
  •    உடல் ரீதியான
  •  பாலியல் ரீதியான
  •  பொருளாதார
  •  வார்த்தை மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
பெண்கள் தன்னுடைய கணவனாலோ அல்லது கணவரின் உறவினா்களாலோ ஏற்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக தீா்வு மற்றும் நிவாரணம் கிடைக்க இச்சட்டம் வகை செய்கிறது.
13, வரதட்சனைத் தடுப்புச் சட்டம் 1961 :
திருமணத்திற்கு முன்போ (அ) பின்போ திருமணத்திற்கென்று பெண் வீட்டாரிடமிருந்து நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ நிதி மற்றும் பொருள் கொடுப்பதோ (அ) கொடுப்பதாகச் சம்மதிப்பதோ வரதட்சனை ஆகும்.
மணமகள்/மணமகனின் பெற்றோர்/உறவினா்கள் வரதட்சனை கேட்டு நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ வற்புறுத்துவார்களேயானால் அவா்களுக்கு 6 மாதத்திற்கு குறையாமலும் 2 வருடம் வரை நீட்டித்து சிறை தண்டனையும் ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்படும்.
வரதட்சனை தடுப்புச் சட்டம் பிாிவு 8 B ன் படி அரசு வரதட்சனை தடுப்பு அலுவலா்களை நியமிக்கலாம் என்பதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலா்களை வரதட்சனைத் தடுப்பு அலுவலா்களாக அரசு நியமித்துள்ளது.
All pdf


Post a Comment

1 Comments