Disqus Shortname

37 மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2020



கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2020,Village Assistant job
தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும் கிராம வாரியாக கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் மாவட்ட வாரியாக கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் எந்தெந்த கிராமங்களில் இருக்கின்றது என்ற அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் காலியாக உள்ள கீழ்க்காணும் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்களை வரவழைத்து நேர்காணல் நடத்தப்படுகிறது, காலி பணியிடங்கள் உள்ள கிராம விவரங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி இடம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது


காலிப்பணியிடம் உள்ள கிராமங்கள்

1, சித்த குடி
2,கண்ணங்காரக்குடி,
3,பிலியவயல்
4,கண்ணனூர்,
5,பிலிவலம்  ,
6,நெய்க்கோணம்,

தகுதிகள்

1, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்,

2, 31 12 2019 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்,

3, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்,

4, மிதி வண்டி ஓட்ட தெரிந்திருத்தல் வேண்டும்,

5,மேற்காணும் வருவாய் கிராமத்தையும் அல்லது அதனை சுற்றியுள்ள குக்கிராமத்தில் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்,

6, நன்னடத்தை சான்று மற்றும் உடல் தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டும்,

7,தகுதி உடைய நபர் திருமணம் ஆனவர் ஆக இருப்பின் ஒரு திருமணத்திற்கு மேல் செய்யாதவராக இருத்தல் வேண்டும், திருமணமாகாத அவர்களும் விண்ணப்பிக்கலாம்

8, விண்ணப்பதாரர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்

மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தங்களது அசல் சான்று ஆவணங்கள் மற்றும் இரண்டு சான்றொப்பம் இடப்பட்ட ஆவண நகல்கள் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்


தேர்வு நடைபெறும் இடம்

திருமயம் வட்டாட்சியர் அலுவலகம்,

தேதி
29,01,2020 காலை 10 மணிக்கு




Post a Comment

0 Comments