அஞ்சல் துறையின் சென்னை மாநகர மத்திய கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பொறுப்புக்கு, நேரடி ஆட்தேர்வு மார்ச் 4ம் தேதி நடக்கிறது. முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர மத்திய கோட்டம், சிவஞானம் சாலை (பாண்டிபஜார் அருகில்) தி.நகர், சென்னை 600 017 என்ற முகவரியில் காலை 11 மணிக்கு இத்தேர்வு நடைபெறும்.கல்வித்தகுதி12ம் வகுப்பு. 18 முதல் 60 வயது உடையவர்கள் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்களாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பற்றோர், சுய வேலைவாய்ப்பு பெற்ற படித்த இளைஞர்கள், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள், எந்தவொரு காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஏஜென்ட்கள், முன்னாள் படைவீரர், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக்குழு நிர்வாகிகள் மற்றும் காப்பீடு விற்பனையில் அனுபவம் உடையோர், கணினி அறிவு/உள்ளூரை பற்றிய தகவல் அறிந்தவர்கள், சென்னையில் குடியிருப்போர் நேர்முக இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ் மற்றும் நகல், முகவரி, கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்துவர வேண்டும். பிற காப்பீடு நிறுவனங்களின் ஆயுள் காப்பீடு வர்த்தகம் செய்யும் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க தகுதியற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது.
2 Comments
Permanent jobs?.....nalladuu
ReplyDeleteok
ReplyDelete