தமிழ்நாடு அரசு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனம் மூலம் துப்பரவு பணியாளர்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் காலியாக உள்ள 17 துப்புரவு பணியாளர்களை நிரப்புவதற்கு இனசுழற்சி முறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனம் செய்யும் பொருட்டு 12,03,2020 க்குள் (அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்
நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் விண்ணப்பத்தில் பெயர் மற்றும் முகவரி பிறந்த தேதி வயது வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் குடும்ப அட்டை ஆதார் அட்டை எண் வேலைவாய்ப்பு அட்டை எண் குறிப்பிடப்பட வேண்டும் இத்துடன் முன்னுரிமைக்கான சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு நகல் இணைத்து சுய விலாசம் பெற்றோரை இணைத்து அனுப்ப வேண்டும்
முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் / கலப்பு திருமணம் / மற்ற இதர தகுதிகள் இருப்பின் அதற்கான சான்றிதழ்களை சமர்பித்து அவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி முன்னுரிமை அளிக்கப்படும்
காலிபணியிடம் - 17
ஊதியம் - தொகுப்பூதியம் முறைப்படி 3,000
வயது 18 to 30
முகவரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
முதல் தளம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் , விழுப்புரம் மாவட்டம்
0 Comments