Disqus Shortname

இந்திய மக்களுக்கு நிவாரண சலுகைகள் அறிவித்த நிர்மலா சீதாராமன்



மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதிப்பு நிவாரண சலுகைகள் அதிரடியாக அறிவித்துள்ளார்,இதற்காக 1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
video

1, ஏழைகள் தொழிலாளர்களுக்காக ரூபாய் 1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

2, விதவைகள் உடல் ஊனமுற்றோர் மூன்று மாதங்களுக்கு 1000  உதவித்தொகை வழங்கப்படும்

3,மூத்த குடிமக்கள் மூன்று கோடிப் பேருக்கு இரண்டு தவணையாக ஆயிரம் என மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்

4, நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து 202 ரூபாயாக உயர்வு


5, மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர் களுக்கு 50 லட்சத்தில் இலவச காப்பீடு

6, 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன் அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதலாக ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்

7, வீடுகள்தோறும் கூடுதலாக மூன்று மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும்

8, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 வழங்கப்படும் நிலையில் முதல் தவணையாக இரண்டாயிரம் ஏப்ரல் முதல்வாரத்தில் உடனடியாக வழங்கப்படும்

9 ,ஜன்தன்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா 500 வீதம் வழங்கப்படும்


10 ,உஜ்வாலாதிட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு மூன்று மாதம் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்

11,ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது

12,மூன்று மாதங்களுக்கு ஊழியர்களோ தனியார் நிறுவனங்களோ பிஎஃப் தொகையை கட்ட தேவையில்லை அரசு அதை செலுத்தும்

13,தொழிலாளர்கள் பிஎஃப் நிதியிலிருந்து 75% நிதி 3 மாத ஊதியம் இதில் எது குறைவோ அதை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம்

14, 100 பயனாளிகளுக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் 15 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம் பெறுவோருக்கு மட்டுமே பிஎஃப் சலுகை பொருந்தும்

15 ,சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் 10 லட்சத்திலிருந்து ரூ 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது


எதிர்வரும் நாட்களில் இது போன்ற இன்னும் பல அரிய திட்டங்களை மக்களுக்காக அறிவித்து மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் காக்க வேண்டும், இது முதல் கட்டமாக அறிவிக்கப்படும் நிவாரணம்,தேவைகளுக்கு ஏற்ப அடுத்த நிவாரணங்களும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

Post a Comment

0 Comments