Disqus Shortname

TNEB JOB-2020 || தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு புதிய முக்கிய அறிவிப்புகள் 2020



தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மூன்று முக்கிய தகவல்களை இந்த பதிவில் நீங்கள் காணலாம்

1, மின்வாரிய பணியாளர்களுக்கான தேர்வு தொடர்பாக மின் வாரிய தலைவர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

2, மின்சார வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு

3, திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மின்சார வாரியம் தொடர்பாக வெளியான முக்கிய தகவல்கள்


1, மின்வாரிய பணியாளர்களுக்கான தேர்வு தொடர்பாக மின் வாரிய தலைவர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே நடைமுறையில் இருந்ததை போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்வி பதில்கள் கொடுத்து தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு 500 பேரை தேர்வு செய்வது தொடர்பாக ஜனவரி எட்டாம் தேதி அறிவிப்பு வெளியானது அந்தத் தேர்வு இணையதளம் மூலம் நடத்தப்பட உள்ளது

இதேபோல கடந்த 2016இல் இணையதளம் மூலமாக தேர்வு நடத்தியபோது கேள்விகளும் அதற்கான பதில்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பாணையை தேர்வுக்கான கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் தொடர்பான கேள்விகள் மட்டும் தமிழில் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் கிராமப்புறத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே நடைமுறையில் இருந்ததை போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்வி பதில்கள் கொடுத்து தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்கள்

இந்த மனு நீதிபதி எம் எஸ் ரமேஷ் அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தினால் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது பாதிக்கப்படும் மேலும் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் தேர்வாகும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது இதையடுத்து நீதிபதி இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிடக்கோரி வழக்கை ஒத்திவைத்தார்


2, மின்சார வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 5000க்கும் என் பயிற்சி பதவிக்கு விண்ணப்பித்து உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு வருகிற 15-ஆம் தேதி நடக்க இருக்கிறது உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் மேலும் அதனை ggggggghhhh இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணியமைப்பு தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்

திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியாளர்கள் நிரப்பப்படுவது குறித்து, வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அது தொடர்பான ஒரு அறிவிப்பினை திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வெளியிடப் பட்டுள்ளது அது தொடர்பான தகவல்கள் பின்வருமாறு


3, திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மின்சார வாரியம் தொடர்பாக வெளியான முக்கிய தகவல்கள்
நீதிமன்ற உத்தரவை மீறி பேட்மேன் பணிக்கு விண்ணப்பித்து உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 15-ல் எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஉடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மெயில் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தேர்வுகள் நடத்த முயற்சிக்கும் மின்சார வாரியத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்

மின்சார வாரியத்தில் எண்ணெயின் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அப்பதவிக்கு தேர்வு நடத்த மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது, கேங்மேன் பதவிக்கு மார்ச் 15-ல் எழுத்து தேர்வு நடத்த மின்சாரவாரியம் முயற்சி செய்து வருவது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும்

தமிழக மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இந்த ஆண்டு மார்ச்சில் கேங்மேன் என்ற 5000 பதவியை உருவாக்கியது அதை எதிர்த்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அடுத்து கேங்மேன் பதவிக்கு ஸ்டேடஸ்கோ வழங்கி தடைவிதிக்கப்பட்டது

மேலும் ஏங்கும் என் பணி நியமனம் தொடர்பாக எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு போன்ற எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என்றும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் இது சம்பந்தமான வேறு எந்த முடிவுகளும் எடுக்க கூடாது எனவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் மீண்டும் நீதிமன்ற உத்தரவை மீறி தேர்வுகள் நடத்த மின்சார தலைமை பொறியாளர் பணியமைப்பு மார்ச் 15 எழுத்துத் தேர்வு நடத்துவது தொடர்பாக ரெண்டு மூணு 2020 திங்கட்கிழமை அன்று பத்திரிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ளது

எனவே நீதிமன்ற உத்தரவை மீறி கேங்மேன் பதவி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மின்வாரியம் உடனடியாக நிறுத்த வேண்டும் மேலும் இதே நிலை நீடித்தால் மின்சார வாரியத்தின் மீது தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

தொழிலாளர் விரோத போக்கை கைவிட்டு விட்டு கேங்மேன் பதவி குறித்து மார்ச் 15-இல் எழுத்துத் தேர்வுகள் உட்பட எந்த ஒரு நடவடிக்கையையும் மின்வாரியம் எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவுப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments