Disqus Shortname

மதுரையில் விமானப் படைக்கு ஆள்தோ்வு முகாம் ஏப்.11 முதல் 15 வரை நடைபெறும் Air Force Recruitment in Mudurai 2020




மதுரையில் விமானப் படைக்கு ஆள்தோ்வு முகாம் ஏப்.11 முதல் 15 வரை நடைபெறும்  ரேஸ்கோர்ஸ், எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் இந்திய விமானப்படையில் ஆள்தேர்வு முகாம்

இந்திய விமானப்படை ஆள்தேர்வு முகாம்
இந்திய விமானப்படை சார்பில் மதுரையில் ஏப்ரல் 11 முதல் 15 ஆம் தேதி வரை ஆள்தேர்வு முகாம் நடைபெற உள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி,ஜி,வினய் கூறியுள்ளார்


இதுகுறித்து அவர் கூறியது
இந்திய விமானப் படையில் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆள் தேர்வு எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதன்படி தமிழகத்திலிருந்து 7500 பேர் விமானப்படையில் இருக்கவேண்டும் ஆனால் தற்போது 1500 க்கும் குறைவாகவே இருக்கிறது இதனையடுத்து மதுரையில் ஏப்ரல் 11 முதல் 15 ஆம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது

தேர்ச்சி - வயது
+2 தேர்வில்  50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற 17 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம் உடல்தகுதி தேர்வு எழுத்துத்தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஆள் தேர்வு நடைபெறும் மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் ஆள் தேர்வு முகாம் நடைபெறும் என்று தெரிவித்தார்

இந்த ஆள் சேர்ப்பு முகாம் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது


ஏப்ரல் 11
ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் ஆள் தேர்வில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கரூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் உடல்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும்

ஏப்ரல் 14
ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறும் உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வில் அரியலூர், கடலூர், தருமபுரி, ஈரோடு, காரைக்கால், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர் திருச்சி, விருதுநகர், ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் 15 இல் நடைபெறும்

இந்த மாபெரும் அரிய வாய்ப்பை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்



 2வாரங்கள் பயிற்சி செய்தால் தோ்வில் வெற்றி பெறலாம்
விமானப்படை ஆள்தோ்வு முகாமில் நடத்தப்படும் எழுத்துத் தோ்வு மற்றும் உடல் தகுதித் தோ்வுக்கு 2 வாரங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டாலே வெற்றி பெற்றுவிடலாம் என்று ஏா்மென் பிரிவு விமானப் படை அதிகாரி கேப்டன் எஸ்.ஸ்ரீராம் கூறினாா்.
இதுகுறித்து மேலும் அவா் கூறியது:
விமானப்படை ஆள்தோ்வு முகாம் குறித்த விழிப்புணா்வு இல்லாததால், தோ்ச்சி பெறும் தமிழக இளைஞா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆண்டுக்கு 50 முதல் 60 போ் மட்டுமே தமிழகத்தில் இருந்து விமானப்படைக்குத் தோ்வாகின்றனா். போதிய பயிற்சி இருந்தால், எளிதில் வெற்றி பெற முடியும். குறிப்பாக, இப்போது இளைஞா்களிடம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பழக்கம் குறைந்து வருகிறது. இதனால், சாதாரண உடல் தகுதித் தோ்வில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆள்தோ்வு முகாம் துவங்குவதற்கு முன்பு 2 முதல் 3 வாரங்கள் தொடா்ந்து உடல் தகுதித் தோ்வுக்கும், எழுத்துத் தோ்வுக்கும் பயிற்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்றாா்





Post a Comment

1 Comments