தமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் எத்தனை பேர் அறிக்கை தர அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 87 மேல்நிலைப்பள்ளிகள் 146 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன இதில் 32 மேல்நிலைப் பள்ளிகளிலும் 46 உயர்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன
146 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன இதில் கணினி பயிற்றுனர் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கும்
அதிகப்படியான காலியிடங்கள் இருப்பதால் பணியில் உள்ளோர் கூடுதல் பணிச்சுமை உடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய நிலையால் மாணவர்களுக்கு முறையாக கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,
இதேபோல் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் மாணவ மாணவியர் விடுதிகளில் காப்பாளர் உள்ளிட்ட சுமார் 1800 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் காலியாக உள்ளன
இதேபோல் ஆதிதிராவிடர் நலத் துறையில் பணியாற்றும் பலருக்கும் பணியிட மாறுதல் பதவி உயர்வு உள்ளிட்டவையும் வழங்கப்படாமல் உள்ளது இதனால் ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது
இந்த மனு நீதிபதிகள் பி என் பிரகாஷ் பி புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது மனுதாரர் வக்கீல் ஆஜராகி அதிகரிக்கும் காலியிடங்கள் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்
இதையடுத்து நீதிபதிகள் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை உள்ளது என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13 தள்ளிவைத்தனர்
0 Comments