திருச்சிராப்பள்ளி, மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள்
Applications are invited for the Vacancies at Deputy Director of Fisheries Dept. Tiruchirappalli Office
திருச்சி மாவட்டத்திலுள்ள மீன்வளத் துறையில் அசூர் மீன் பண்ணையில் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
திருச்சி மாவட்டத்திலுள்ள மீன்வளத் துறையில் ஓசூர் மீன் பண்ணையில் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர் பணியிடங்களை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் பத்திரிக்கையின் மூலமும் இனச்சுழற்சி அடிப்படையில் ஆதிதிராவிடர் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் மகளிர் ஆதரவற்ற விதவை ஒரு 1 நபரும்,, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமை பிரிவினர் பிரிவில் 1 நபர் நிரப்பப்பட உள்ளது
இந்த வேலைவாய்ப்பிற்கு 01,01 2020 அன்றைய நிலவரப்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வயது உச்ச வரம்பு 32 மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியினர் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 35 ஆக இருக்க வேண்டும்
கல்வித்தகுதி
1,தமிழில் எழுத படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்
2,நீச்சல் வலை பின்னுதல் அருந்த வலைகளை சரிசெய்தல் மற்றும் வீச்சு வலை வீசுதல் தெரிந்திருக்கவேண்டும்
3,மீன் துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டபோது காண சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
மேற்காணும் தகுதியுள்ள நபர்கள் 05,03, 2020 முதல் 02,04, 2020 முடிய உள்ள நாட்களுக்குள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மீன்வளத் துறை இயக்குனர் மண்டலம் திருச்சி 17 / 12 சமது பள்ளி தெரு காஜா நகர் திருச்சிராப்பள்ளி 620020 அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பத்தை அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்
0 Comments