தமிழ்நாடு காவல்துறை எஸ்.பி.சி.ஐ.டி ஆட்சேர்ப்பு 2020
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் (Junior Reporter) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறிப்பாக, இப்பணியிடத்திற்கு உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் காவல்துறையில் பணியாற்றக் காத்திருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
தமிழக காவல் துறை வேலை
தமிழக காவல் துறைக்கு உட்பட்ட Police Shorthand Bureau (SBCID) பிரிவின் TNSPSS நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தேர்வுகள் நடத்தி, நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
காலிப் பணியிட விபரங்கள்
தமிழக காவல் துறைக்கு உட்பட்ட SBCID நிறுவனத்தில் மொத்தம் 29 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 01.07.2001 முன் பிறந்தவராக இருத்தல் வேண்டும் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பிரிவினருக்கு ஏற்ப மாறுபடுகிறது
இடஒதுக்கிடு
BC, MBC மற்றும் DC பிரிவினர் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், எஸ்.சி, எஸ்சி (ஏ), எஸ்டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். இதர பிரிவினர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
கல்வித் தகுதி:
ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. 12 ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்து, ஆங்கில தட்டச்சு படித்திருத்தல் அவசியம். அடிப்படை கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
இதற்கு உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை எதுவும் கிடையாது. தகுதித் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, காவல் துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் இந்த ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
SBCID Recruitment 2020 முக்கிய நாட்கள்:
SBCID வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியான நாள் : 1 மார்ச் 2020 விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 1 மார்ச் 2020
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31 மார்ச் 2020
SBCID ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சுய விண்ணப்பம் தயாரித்து, அதனைப் பூர்த்தி செய்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments