Disqus Shortname

தேனி மாவட்டத்தில் கொரனோ பாதிப்பா? கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரனோ அறிகுறி



தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரனோ அறிகுறி

கம்பம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த "மைதீன்" காய்கறி லோடு வேனில் கேரளாவிற்கு வாரம் நான்கு நாட்கள் சென்று திரும்புவார் இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மைதீன் அவர்களின் மனைவி "ஜாஸ்மின் பேகம்" அவர்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், பாதிப்பு இருந்தது, 

அரசு மருத்துவமனை
இந்த நிலையில் கம்பம் தனியார் மருத்துவமனைக்கு வந்தவரிடம் கொரனோ அறிகுறி இருந்ததாகக் கூறப்படுகிறது, இதையடுத்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கிருந்த டாக்டர்கள் தீவிர சோதனைக்குப் பிறகு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்றிரவு அனுப்பி வைத்தனர்,

டாக்டர் பொன்னரசன்
இதுகுறித்து கம்பம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பொன்னரசன் கூறும்போது எதையும் உறுதியாக கூற இயலாது என்று உறுதிப்படுத்த தேனி அனுப்பி வைத்துள்ளோம் பரிசோதனை முடிவில் முழு விவரம் தெரியவரும் என்று கூறினார், 

தேனி அரசு மருத்துவக்கல்லூரி
தற்சமயம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற அந்தப் பெண்மணிக்கு கொரனோ பாதிப்பு இல்லை என்றும், அவருக்கு டிபி எனப்படும் (எலும்புருக்கி) பிரச்சினை இருப்பதாகவும் அதனால்தான் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர், இதனைத்தொடர்ந்து கொரனோ பீதியால் யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்று, மாவட்ட நிர்வாகமும், மருத்துவக் குழுவும் தகவல் தெரிவித்துள்ளனர்


"கொரனோ" அச்சப்பட வேண்டாம் விழிப்புணர்வு காணொளி




"கொரனோ" பாதிப்பு என்று வலைதளத்தில் விஸ்வரூபம் எடுத்த காணொளி

தமிழக அரசு வெளியிட்ட "கொரனோ" விழிப்புணர்வு காணொளி


Post a Comment

0 Comments