Disqus Shortname

நியாய விலை கடைகளில் 500க்கு 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது., 19 kinds of groceries will be given to 500 at fair price shops.



Tamil nadu Government of Tamil Nadu has announced that 19 kinds of groceries will be given to 500 at fair price shops.
சென்னை: கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, நியாய விலை கடைகளில் 500க்கு 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

இது குறித்து கூட்டறவு சங்கங்களில் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பிறப்பித்து ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்து அதன் மூலம் மளிகை பொருட்களின் தட்டுபாடு மற்றும் விலை ஏற்றம் ஏற்படும் காரணத்தினால், வருமான இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 500 விலையிலான மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டி.யு.சி.எஸ் நிறுவனத்தின் மூலம் மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு இணைப்பில் கண்டவாறு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இவ்வாறு கூட்டுறவுச் சங்கங்களில் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
19 வகை பொருட்களின் விலை பட்டியல்
விவரம் அளவு விலை வெளிசந்தை விலை
1,துவரம்பருப்பு 1/2கிலோ 57.50 65
2,உளுந்தம்பருப்பு 1/2 கிலோ 64.70 75
3,கடலைப்பருப்பு 1/4 கிலோ 22 27
4,மிளகு 100 கிராம் 42.70 50
5,சீரகம் 100 கிராம் 25.60 30
6,கடுகு 100 கிராம் 9 12
7,வெந்தயம் 100 கிராம் 8.60 11
8,தோசை புளி 250 கிராம் 35.50 42
9, ெபாட்டு கடலை 250 கிராம் 22 25
10,நீட்டு மிளகாய் 150 கிராம் 25.50 30
11,தனியா 200 கிராம் 24 30
12,மஞ்சள் தூள் 100 கிராம் 12.90 16
13,டீ தூள் 100 கிராம் 24 28
14,உப்பு 1 கிலோ 8 10
15,பூண்டு 250 கிராம் 50 70
16,கோல்டு வின்னர் சன்பிளவர் ஆயில் 200 கிராம் 25 29
17,பட்டை 10 கிராம் 3 5
18,சோம்பு 50 கிராம் 6.50 10
19,மிளகாய்த்தூள் 100 கிராம் 25 32
மொத்தம் 491.50 597
இதைத் தவிர பொருட்கள் போடுவதற்கான பை 3.60, வேலை செய்யும்  ஊழியர்களுக்கு கூலி 4.90 ஆக மொத்தம் 500 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது

Post a Comment

0 Comments